பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்களின்றி பயணிகள் போக்குவரத்திற்காகப் பேருந்துகளைப் பயன்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தைத் திருத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு யோசனை முன்வைத்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 காரணமாகப் பேருந்து தொழிற்துறையின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதோடு பணியாளர்களின் வெற்றிடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹிரு செய்திகள் hirunews.lk–
Akurana Today All Tamil News in One Place