பாடசாலைகளை ஆரம்பிக்கப்படுவதற்கும் தடுப்பூசி வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தொழில்நுட்ப காரணங்களின் அடிப்படையிலேயே பாடசாலைகளைத் திறக்கப்பட வேண்டும்.
உலக தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ஆகியன அறிக்கை வெளியிட்டுள்ளன. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நாடுகளை மீளத் திறக்கும்போது ஏற்படும் கொரோனா நெருக்கடி சூழ்நிலைகள் தொடர்பில் அந்த அறிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகள் திறக்கப்படும்போது கொரோனா பரவல் ஒப்பீட்டளவில் உலகநாடுகளில் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளன. வீடுகளில் இருக்கும் சிறுவர்களை விட பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களின் சுகாதார பாதுகாப்பே உறுதியாகவுள்ளது என்பதும் சர்வதேச தரவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (03) நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். -தமிழன்..lk
Akurana Today All Tamil News in One Place