டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் 360 மெட்ரிக்தொன் பால்மா அடங்கிய 16 கொள்கலன்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் விடுவித்துக்கொள்ள முடியும் என நம்புகின்றோம் என பால் மா இறக்குமதியாளர்களின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர்களை இலங்கை மத்திய வங்கி வழங்குவதாக தெரிவித்திருப்பது தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான 50 மில்லியன் டொலர்களை விடுவித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அதன் பிரகாரம் பால்மா இறக்குமதியாளர்களின் வங்கி கணக்குகளுக்கு குறித்த டொலர்கள் இன்றைய தினத்துக்குள் கிடைக்கும் என நம்புகின்றோம்.
அரசாங்கம் தெரிவிப்பதுபோல் தேவையான டொலர்கள் இன்றைய தினத்துக்குள் கிடைக்கப்பெற்றால், துறைமுகத்தில் தேங்கி இருக்கும் 360 மெட்ரிக்தொன் பால்மா தொகை அடங்கிய 16 கொள்கலன்களை எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமைக்குள் விடுவித்துக்கொள்ள முடியுமாகும் என நம்புகின்றோம்.
அத்துடன் இலங்கை மத்திய வங்கியினால் விடுவிக்கப்பட்டடிருக்கும் டொலர்கள் பால்மா இறக்குமதியாளர்களின் வங்கி கணக்குகளுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்கப்படுதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கும் என்பது தொடர்பில் தெரிவிக்க முடியாது. எந்தளவு விரைவாக டொலர்கள் வங்கி கணக்குகளில் வைப்பிலடப்படுமாே தன் பிரகாரமே பால்மா தொகையை துறைகத்தில் இருந்து வெளியெற்றிக்கொள்ள முடியும் என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம்)-வீரகேசரி-
Akurana Today All Tamil News in One Place