ஒக்டோபருக்குள் கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம்

உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கொடுக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று (30) தெரிவித்தார்.

92 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு கிலோ சீனியை 220 ரூபாய்க்கு விற்க அனுமதித்ததற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இராஜினாமா செய்யாமல், பொய்யான அறிக்கைகளைத் தொடர்ந்தால், அமைச்சர் அந்த மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.

ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாய்க்கு மேல் இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகர்கள், வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் தவறான நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சம்பிக்க எம்.பி தெரிவித்தார்.

  -தமிழ் மிற்றோர்

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter