அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தொடர்ச்சியாக அமைச்சரவை இவ்வாறு பிரச்சினையை காலதாமதப்படுத்துமாயின் போராட்டத்தைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழி கிடையாது.
43 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த விவகாரம் தொடர்பில் இவ்வாறு கவனயீனமாக அரசாங்கம் செயற்படுமாயின் அதனை பாரதூரமான நிலைமையாகவே நாம் பார்க்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போது அரச உத்தியோகத்தர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் முயற்சிகளே இடம்பெறுகின்றன. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சகல அரச உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொண்டு எடுக்கக் கூடிய உச்ச பட்ச நடவடிக்கையை எடுப்போம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
-வீரகேசரி-(எம்.மனோசித்ரா)
Akurana Today All Tamil News in One Place