கண்டியில் 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 நபர்களை கண்டி பூஜாபிட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த 7 நபர்கள் கடந்த 6 மாதங்களில் இந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
29 வயதான ஒரு நபர் சிறுமிக்கு மொபைல் போனை ஒன்றினை பரிசாக அளித்த பின்னேரே, இச்சிறுமியுடன் ஆரம்ப தொடர்புகளை மேற்கொண்டுள்ளார், பின்னர் அவரை தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மேலும் 2 சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறையினர் தேடுவதால் விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.
Akurana Today All Tamil News in One Place
