ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒற்றை டோஸ் அதிக நோயெதிர்ப்புத் திறன் கொண்டது என்று ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் இரண்டு விஞ்ஞானிகளால் உட்பட உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கல் நன்மை பயக்கும் என்றும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்புட்னிக் முதல் டோஸின் நோயெதிர்ப்பு எதிர்ச்செயல்களை ஆராய்ந்தனர்.
இலங்கை மக்கள்தொகையில், அஸ்ட்ரா ஸெனெகாவின் முதல் டோஸைப் பெற்ற 4 வாரங்களுக்குப் பின்னர் இருந்த நோயெதிர்ப்புடன் இது ஒப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -தமிழ் மிற்றோர்-
Akurana Today All Tamil News in One Place