யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த ரிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த ரிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் ரிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால், மோட்டார் சைக்கிள் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பெண் கீழே விழுந்ததில் ரிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலைப் பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
ரிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Akurana Today All Tamil News in One Place