இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அடுத்த சில நாட்களிலும் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கிணங்க மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார். – தினகரன் –
Akurana Today All Tamil News in One Place