சிறைக் கைதிகளுக்கு அவர்களின் உணர்வினர்களுடன் பேசுவதற்கா இணையவழி தொடர்பாடல் (Zoom) வசதியை பெற்று கொடுத்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (13) தெரிவித்தனர்.
இந்த திட்டம் ஊடாக உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்காத சிறைக் கைதிகளுக்கு உறவினர்களுடன் இலகுவாகப் பேச வாய்ப்பு கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைக் கைதிகளின் பெயர் மற்றும் பதிவிலக்கங்களை வழங்குவதன் ஊடாக உறவினர்களுக்கு சம்பந்தப்பட்ட கைதிகளுடன் இணையவழி ஊடாக உரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-தமிழன்.lk-
Akurana Today All Tamil News in One Place