ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டால் அந்த ஆசனத்தை பல்வேறு பிரதேசங்கள் கோரியுள்ளதாக அறியமுடிகிறது.
குறிப்பாக சொற்ப வாக்குகளால் இம்முறை பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்ட குருநாகல் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அந்த மாவட்டத்திற்கும் திகாமடுல்லையில் அட்டாளைச்சேனை,சம்மாந்துறை,மட்டக்களப்பில் ஓட்டமாவடி மற்றும் வன்னி புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கட்சித்தலைவர் ஹக்கீமுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கட்சி செயலாளர் நிஸாம் காரியப்பரும் முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியலில் ரேசில் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி மு.கா தலைவர் திரிசங்கு நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
Akurana Today All Tamil News in One Place