ஒகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க முடியும்.
தேர்தல்களில் வாக்களிப்பது இலங்கையில் பாரம்பரியமாக காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.
எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 காரணமாக வாக்களிப்பின்போது அதிகளவான சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டிய காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place