2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் ஒகஸ்ம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk (onlineexams.gov.lk/onlineapps) என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வருடம் (2020) கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்கள் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
உரிய வழிமுறைகளை கவனமாகப் படித்து அதன்படி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டல்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்ப்பட்டுள்ளது, இதுதொடர்பான விபரங்கள் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
https://www.doenets.lk/images/resources/EVRE/Paper%20AD%20Tamil_1595401360448.pdf
Akurana Today All Tamil News in One Place