கவிதை நூலொன்று எழுதி வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அஹ்னப் ஜஸீம் எதிர்கொண்டுள்ள நிலைமையினை ஆராய்ந்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்பு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கும்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் அஹ்னப் ஐஸீம் தற்போது எதிர்தோக்கியிருக்கும் நிலைமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்த முழு விபரங்கள் அடங்கிய கடிதத்தினை. அடுத்தே மனித உரிமை ஆணைக்குழு பயங்கரவாத விசாரணை பிரிவிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளது.
இளம் ஊடகவியலாளர் சங்கம் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தரணிகள் அவரைச் சந்திப்பதற்கு அனுமதிக்காமை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அவரை எலியொன்று கடித்தமை, அவர் நவரசம் எனும் நூலில் அடிப்படைவாத கருத்துகளை எழுதியமை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாலும் பின்பு வேறு விசாரணைகளை முன்னெடுக்கின்றமை ஆகிய விடயங்களை குறிப்பிட்டு முறையிட்டுள்ளது.
அவரது கைது தொடர்பாக இச் சங்கம் 2020.12.09 ஆம் திகதியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றினைச் செய்துள்ளது. இடைக்கப்பெத்ற இரண்டாவது முறைப்பாட்டினையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விஷேட குழுவொன்று அஹ்னப்பின் நிலைமையினைப் பார்வையிடுவதற்கு நேற்று வியாழக்கிழமை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி),
Akurana Today All Tamil News in One Place