கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளது.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய பெண்ணொருவரும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று புதன்கிழமை மாலை 10 மணி வரை 244 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 92 686 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 89 251 பேர் குணமடைந்துள்ளதோடு , 2781 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இன்று காலை வரை 9 இலட்சத்து 13 219 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 393 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. -வீரகேசரி பத்திரிகை-
Akurana Today All Tamil News in One Place