கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் பாணந்துரை பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்து வந்ததுடன், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல நபர்களிடம் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணம் வசூலித்தும் உள்ளார்.
பண வசூலிப்பின் பின்னர் சந்தேக நபர் காணாமல்போயுள்ள நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
29 வயதான அட்டலுகம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவும் உள்ளார்.-வீரகேசரி பத்திரிகை-
Akurana Today All Tamil News in One Place