27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் இரு பவுசர்கள் பறிமுதல்

தங்கொட்டுவ பகுதியில் நச்சு இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் கொண்ட இரு பவுசர்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

119 என்ற அவசர எண்ணுக்கு நேற்றிரவு வந்த அழைப்புக்கு இணங்க பொலிஸார் முன்னெடுத்த விரைவான நடவடிக்கையின்போதே இந்த பறிமுதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு வாகனங்களின் சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

சந்தேக நபர்கள் 25 ஆம் திகதி ராமமையில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து இந்த தேங்காய் எண்ணெயை இரு பவுசர்களினூடாக கொண்டு வந்திருந்ததுடன், தங்கொட்டுவ பகுதியில் அமைந்துள்ள ஆலையில் வைத்து குறித்த எண்ணெய் பவுசர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். -வீரகேசரி பத்திரிகை-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter