கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் எந்த ஒரு நபரையும் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்மானத்தை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி, இதுவரை தகனம் மட்டும் என்ற நிலைப்பாட்டை பின்பற்றிய இலங்கை, கொரோனா மரணங்களின்போது, தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ முடியும் என 2021 பெப்ரவரி 25 ஆம் திகதியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சியின் கையொப்பத்துடன் நேற்றிரவு (25)10.00 மணியளவில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.
தனிமைபப்டுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் 2,3 ஆம் பிரிவுகளின் ஒழ் இந்த வர்த்தமானி சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்௪ியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. காலத்துக்கு காலம் திருத்தப்பட்டமைக்கு அமைவாக 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 7481 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தானியங்களை களஞ்சியம் செய்தல் மற்றும் அங்கிலொஸ்டோமியாசிஸ் ஓழுங்கு விதிகளை மேலும் திருத்துவதாக சுட்டக்காட்டி 2170/8 எனும் வர்த்தமானி கடந்த 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டம் எனும் தலைப்பின் கீழ் இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டருந்தன.
அதில் 61 ஆவது ஒழுங்கு விதியுடன் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் புதிய விதஇகள் சேர்க்கப்பட்மருந்தன. 61.அ எனும் புதிய பிரிவு ஊடாக கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறக்கும் ஒருவரின் பிரேதத்தை தகனம் செய்தல் எனும் விடயம் அந்த வர்த்தமானி ஊடாக வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, நேற்று 25 ஆம் திகது வெளியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி 2170/8 எனும் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்ட 61. ௮ எனும் புதிய பிரிவு மேலும் இருத்தப்பட்டு அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டருந்த, பூதவுடலின் தகனம்! எனும் வார்த்தை பிரயோகமானது ‘பூதவுடலின் தகனம் அல்லது அடக்கம்’ என சொற்பதங்களை இடுவதன் ஊடாக திருத்தப்பட்டுள்ளது.
இதனைவிட 2020 ஏப்ரல் 11 வர்த்தமானியில் 61 அ முதலாம் உப ஒழுங்கு விதியில் குறிப்பிடப்பட்டிருந்த ‘பணிப்புரைகளுக்கு இணங்க’ எனும் வார்த்தை பிரயோகமானது ‘பணிப்புகளுக்கு இணங்க தகனம் செய்யப்படலாம் அல்லது அடக்கம் செய்யப்படலாம் த௲னம் எனும் விடயத்தில் ‘அத்தகைய நபரின் பூதவுடல்… எனும் சொற்பதங்களை இடுவதன் ஊடாக புதிய 2216/38 வர்த்தமானியால் திருத்தப்பட்டுள்ளது.
இதேவேளை 2216/38 எனும் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, ஏற்கனவே 2170/8 எனும் வர்த்தமானியில் உப ஒழுங்கு விதியில் கூறப்பட்டிரந்த கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19 தொற்றினால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் பிரேதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் உத்தரவுகளுக்கு அமைய, உயிரியல் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கில் 800 முதல் 1,200 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் எரித்தல் வேண்டும் என்ற ஒழுங்கு விதிக்கு மேலதிகமாக மற்றொரு உப ஓழுங்கு விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
2216/38 எனும் அடக்கத்துக்கும் அனுமதியளிக்கும் வர்த்தமானியில் புதிதாக உள்ளீர்க்கப்பட்டுள்ள உப ஓழுங்கு விதியில், ‘ அடக்கம் எனும் விடயத்துல், அத்தகைய ஆளின் பூதவுடல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைகளுக்கு அமைய, அத்தகைய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், முறையான அதிகாரியினால் அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்தில் அடக்கம் செய்யப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட 2170/8 எனும் வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டிருந்த 2 ஆம், 3 ஆம் உப ஒழுங்கு விதிகளிலும் காணப்படும் தகனத்தை மட்டும் குறிக்கும் வாக்கியங்கள், திருத்தப்பட்டு 2216/38 எனும் புதிய வர்த்தமானி ஊடாக தகனம், அடக்கம் எனும் இரண்டையும் அனுமதிக்கும் வண்ணம் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்.எப்.எம்.பஸீர்)

Akurana Today All Tamil News in One Place