முஸ்லிம் சமய பண்பாட்டளுவல்கள் அமைச்சின் 1/MRCA/A/06/COVID 19 இலக்க 2021.01.07 ஆம் திகதி இலக்க கடிதத்திற்கு அமைய பள்ளிவாசல் ஒன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியுமான அதிகபட்ச எண்ணிக்கை ஐம்பதாக அதிகறிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையின்படி குறித்த ஐம்பது பேரையும் தெரிவு செய்யும் முறை முன்னதாக அறிவிக்க வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களில் இடம்பெறும் நிகாஹ் மஜ்லிஸ், ஏனைய மஜ்லில்கள் உட்பட அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐம்பது பேர் ஒன்றுகூடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பேண வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களை தொடர்ந்தும் மூடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் பள்ளிவாசல்களில் ஒன்று கூட முடியுமானவர்களின் எண்ணிக்கை இருபத்து ஐந்தாக குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place