எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்! -அத்துரலியே ரதன தேரர்

பங்களாதேஷை விடவும் எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்! -அத்துரலியே ரதன தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்ரஸா பாடசாலைகளிலே போதிக்கப்படுகிறது. அதனால் மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும். அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான எந்த வேலைத்திட்டங்களையும் இதுவரையும் மேற்கொள்ளாமல் உள்ளது என எமது மக்கள் சக்தி உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (6) நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை நிலைநாட்டுவதாக தெரிவித்தாலும் இன்னும் அது ஏற்படுத்தப்படவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பவை மத்ரஸா பாடசாலைகளாகும். கல்வி அமைச்சுக்கு அப்பாற்பற்று செயற்படும் இந்த மத்ரஸா பாடசாலைகள் சட்டவிரோதமானவை. அதனால் அவற்றைக் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் அறநெறி பாடசாலைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

அதேபோன்று இஸ்லாம் மாக்கத்தைவிட்டு மதம் மாறியவர்களை கொலை செய்யவேண்டும் என குர்ஆனில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயம் 10ஆம் ஆண்டும் இஸ்லாம் அச்சுப் புத்தகத்தில் பொறிக்கப்பட்டிருப்பதே பாரிய விடயமாகும். அந்தளவுக்கு நாங்கள் குருடர்களாகவே இருந்திருக்கிறோம்.

பங்களாதேஷ் நாட்டிலும் பார்க்க எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை மற்றும் உணவு பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர் என்றார்,

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter