மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் தெடிமுண்ட தேவாலயம் முன்பாக உள்ள புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மறைப்பின் மீது அடையாளம் தெரியாதோர் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதில், வெளிப்புற கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாவனெல்லை நகருக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இன்று (29) விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட, இராணுவமும் மேலதிக பொலிஸ் படையும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தன.
புத்தர் சிலை கண்ணாடி மறைப்பு மீதான தாக்குதலையடுத்து, மாவனெல்லை மற்றும் ஹிங்குல நகரில் இந்த விசேட பாதுகாப்பு அமுல் செய்யப்பட்டு ள்ள நிலையில், விசாரணைகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் களர்ஹ்தில் இறக்கப்பட்ட்ள்ளன.
இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்துக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளரும் அழைக்கப்பட்டிருந்ததாக பாத்காப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
Akurana Today All Tamil News in One Place