கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி மற்றும் கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பிரதேசங்கள் நாளை அதிகாலை 05 மணி முதல் விடுவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ரந்திய உயன வீட்டுத் திட்டம் மற்றும் பார்கியுஷன் வீதி தெற்கு ஒழுங்கை ஆகியவை தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.
வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்சந்த செவன வீட்டுத் திட்டம், சாலமுல்ல மற்றும் விஜயபுர கிராம சேவகப் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டிருக்கும் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
Akurana Today All Tamil News in One Place