இணையத்தளம் ஊடாக தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக விளம்பரத்தை வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தில் பாதுகாப்பு சேவையில் உள்ள தொழில் வாய்ப்புக்காக நபர்களை தெரிவு செய்து அந்த தொழில் வாய்ப்புக்காக பணத்தை செலுத்திய பின்னர் குறிப்பிட்ட வகையில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை என்று சிலர் முறைப்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தாய்லாந்தில் இலங்கை தூதரகத்தில் விடயங்கள் கண்டறியப்பட்டன.
இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் இவ்வாறான தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இல்லை என்று தூதரகத்தினால் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பணியகத்தினால் இந்த முறைப்பாடு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் இணைத்துக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டு சில மோசடிகாரர்கள் நாட்டில் முக்கிய ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதுடன் அதற்காக பணத்தை செலுத்தி தொழில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன.
இவ்வாறான மோசடிக்காரர்களுக்கு எதிராக பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place