ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரணில் வர வாய்ப்பு.

நாடாளுமன்றத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.  

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையை நிரப்புவதற்காக இன்று ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளதாக ருவன் விஜயவர்த்தன ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter