இன்றைய வாக்கெடுப்பில் முஸ்லிம் அமைச்சர்களின் வாக்களிப்பு விபரம்

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

பிரதமரால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 4 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 

அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. 

அதனடிப்படையில் வரவு செலவு திட்ட ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது. 

இந்த வாக்களிப்பில் 20 ஐ ஆதரித்து வாக்களித்த  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹரீஸ் , தௌபீக் , பைஸல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்ட நான்கு பேரும் கலந்து கொள்ளவில்லை.

இஷாக் ரஹுமான் , அலி சப்ரி ரஹீம் , முஷர்ரப் ஆகியோர் 2021  வரவு செலவு திட்ட யோசனைக்கு  ஆதரவாக இன்று வாக்களித்தனர்.

இவர்கள் மூவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர்.

சுகயீனம் காரணமாக ரிஷாத் பதியுத்தீன் வரவு செலவு திட்ட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என சபாநாயகர் மன்றில் அறிவித்தார். 

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல ரிஷாத் பதியுத்தீனுக்கு வாக்களிக்க அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தியமைக்கு பதில் அளித்த சபாநாயகர் சுகயீனம் காரணமாக ரிஷாத் பதியுத்தீன் வரவு செலவு திட்ட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை  சபாநாயகர் மன்றில் அறிவித்தார். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களித்தார்.

    Check Also

    10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

    உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

    Free Visitor Counters Flag Counter