மீன் சாப்பிடுவதற்கு வீணாக அச்சப்படத் தேவையில்லை. பேலியகொடை மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று மீனில் இருந்து ஏற்பட்டது அல்ல. மீன் வியாபாரியிடமிருந்தே ஏற்பட்டிருக்க வேண்டும் என தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.
மீன் சாப்பிடுவதற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொர்ந்து தெரிவிக்கையில், பேலியகொடை மொத்த மீன் விற்பனை சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மீன் சாப்பிடுவதில் வீணான பயத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். மீன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதனால் தற்போதைய நிலையில் எமது ஆகாரத்தில் மீனை சேர்த்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.
அத்துடன் இலங்கை மக்கள் மீன் சமைக்கும் முறையின் பிரகாரம் அதனுள் எந்தவொரு வைரஸும் இருக்க முடியாது. அதிகூடிய வெப்பத்தில் மீன் சமைப்பதன் மூலம் அதனுள் இருக்கும் பாதகமானவைகள் அழிவடைந்து செல்கின்றன. மீன் சமைத்த பின்னர் சவர்க்காரமிட்டு கைகள் மற்றும் அதற்காக பயன்படுத்திய பாத்திரங்களை கழுவிக்கொள்வது அவசியமாகும்.
Akurana Today All Tamil News in One Place