கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் விபத்து!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு பஸ் ஒன்று பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. பஸ் சாரதியும் நடத்துனரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேலியகொடை திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸே விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.

Bus-Accedent

பஸ்ஸின் இடது பக்க முன் ரயர் வெடித்ததனையடுத்தே சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனையடுத்து பஸ் விபத்துக்குள்ளானது.

இதன் காரணமாக பஸ்ஸின் முன்பக்கம், இடது பக்கம் மற்றும் பின் பக்கத்தின் மேல் பகுதி உட்பட பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதமடைந்தன. மேலும் குறித்த பஸ்ஸில் பயணிகள் எவரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Bus-Accedent-2

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter