கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், தற்போதைய சுகாதார நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தவறான முன்னுதாரணத்தையே வழங்குகிறது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழு ஒன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைக்கக்கூடாது என்றும் அவர் மேலும் ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கிறார்.
அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
Akurana Today All Tamil News in One Place