பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு நாணயத் தாள்களே காரணம்.

 பிரெண்டிக்ஸ் கொத்தணியின் உப-கொத்தணியான பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் உற்பத்தியாகி பரவுவதற்கு, நாணயத் தாள்களே பிரதான காரணமாகியிருந்தன என்னும், மீன் வர்த்தகர்களுக்கு இடையிலான நாணயத்தாள் பறிமாற்றமே காரணமாக இருந்ததென, விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது.

பேலியகொட உப-​கொத்தணி 13 தொற்றாளர்களுடன் இனங்காணப்பட்டது. இன்று அங்கு 5,513 தொற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது புள்ளிவிவரத் தகவல்களின் ஊடாக வெளியாகியுள்ளது.

சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பின்னரே இத்தகவல் அம்பலமாகியுள்ளது.

பிரெண்டிக்ஸ் கொத்தணி ஒக்டோபர் 3ஆம் திகதி உருவானது. அதன்பின்னர், ஒக்டோபர் 12ஆம் திகதியன்றே பேலியகொட உப-கொத்தணி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter