வீதியோர வியாபாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், வீதியோரங்களில், மூடியிருக்கும் கடைத்தொகுதிகளுக்கு அருகிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறும் பட்சத்தில், குறித்த நபர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஊரடங்கு காலப்பகுதிகளில், இச்சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுமென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். -வீரகேசரி பத்திரிகை-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter