மேல்மாகாணத்தில் உள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மாவட்டங்களில் வாழும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் உள்ளவர்கள் இவ்வாறு வெளிமாவட்டங்களுக்கு செல்வதால், அந்த மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம் தற்காலிகமானதே. இது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவு செய்யப்படும்.
எனவே யாரும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place