பேருவளை மீன்பிடித் துறைமுகம் ஒரு வாரமாக மூடப் பட்டிருந்தமையால் மீனவர்கள் சேமித்து வைத்திருந்த சுமார் 20,000 கிலோ மீன்கள் பழுதாகிவிட்டதால் அவை அப் புறப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், ஏனைய மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து கணிசமான அளவு மீன்கள் அரசாங்கத்தால் மற்றும் தனியார் துறையால் கொள்வனவு செய்யப்பட்டதாக மீன்வளக் கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.டபிள்யூ.எல். தவுலகல தெரிவித்துள்ளார்.
தற்போது மீன்பிடித் துறைமுகங்கள் பலவற்றில் லின்னோ இன மீன்கள் காணப்படுவதாக தவுலகல தெரிவித்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place