கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட, அங்கவீனமான 19 வயதுடைய மொஹமட் மின்ஹாஜ் என்பவருடைய, ஜனாஸா இன்று செவ்வாய்கிழமை 27 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
இன்று கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் 19 வயது அங்கவீனமான, மொஹமட் மின்ஹாஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பது புதிராக உள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னர் அவருடைய ஜனாஸா, தகனம் செய்யப்பட்டு விட்டது என்றார்
யா அல்லாஹ், மரணித்தவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவனத்தை கொடுத்தருள்வாயாக
Akurana Today All Tamil News in One Place