இலங்கையில் மேலும் 8பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய கம்பஹாவை சேர்ந்த இருவரும், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தைச்சேர்ந்த 3 கைதிகளும் சேனபுரா புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த 3 கைதிகளும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும், உள்ளடங்குவதுடன் கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய ஊழியருடன் நெருங்கிய தொடர்பை பேணிய ராஜங்கனயாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
இதனையடுத்து நேற்று (17) இரவு 11 மணிவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,697 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 674 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 99 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 2,012 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place