உயர்தரப் பரீட்சையில் மாணவர் போல் ஆள்மாறாட்டம் செய்து தோற்றிய மாணவர் ஒருவர் கற்பிட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சிங்கள மொழி பாடசாலையில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவர் ஒருவரை பரீட்சை கண்காணிப்பு குழுவினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவன் கற்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த மாணவன் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருவதாக தெரிவித்த பொலிஸார், இவர் உயர்தரப் பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் தனது சக நண்பனுசக்காக பரீட்சை எழுதி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த மாணவன் இன்று சனிக்கிழமை (24) நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
Akurana Today All Tamil News in One Place