கொவிட்-19 ஆபத்து காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொது சேவைகள், மட்டுப்படுத்தப்பட்ட ஊயர்கள் மற்றும் வரையறைகளுடன் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வாகனப் பதிவுகள், சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கல், வாகன இலக்கத் தகடுகள் வழங்கல் மற்றும் வாகன ஆய்வு தொடர்பான அறிக்கை வெளியிடுதல் போன்ற சோவைகளை பெற வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை திணைக்களத்தின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேற் கூறப்பட்ட நடைமுறைக்கு வெளியே ஏனைய சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன பரிமாற்ற விண்ணப்பங்களை அருகிலுள்ள பிரதேச செயலகம் அல்லது மோட்டார் போக்குவரத்து துறை மாவட்ட அலுவலகங்களுக்கு ஒப்படைக்கும் வசதியும் உள்ளது.
எனவே, அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வெராஹெரா அலுவலகத்தால் உரிமங்களை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை மேலும் அறிவிக்கப்படும் வரை நிறுத்தப்படும்.
Akurana Today All Tamil News in One Place