பாராளுமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில் அவர் தலைமறைவாகியிருப்பதற்கு உதவிகள் புரிந்த குற்றச்சாட்டுக்காக மொத்தமாக 07 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு மருத்துவர் உடபட தம்பதியினரும், ஒரு வெளிநாட்டு நிறுவன பிரதிநிதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆறு நாட்களாக, ஆறு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று அதிகாலை கொழும்பு தெஹிவளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place