திருமணத்தின் போது சுகாதார நடை முறைகளை பின்பற்ற தவறியதால், திருமண மண்டபத்துக்கு சீல் வைப்பு.

திருமணத்தின் போது சுகாதார  நடை முறைகளை பின்பற்ற தவறிய தால், திருமண மண்டபத்துக்கு சீல் வைப்பு.

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் நேற்று சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினரால் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது சமூக இடைவெளி பின்பற்றப்படாமை, முகக்கவசம் அணியாமை மற்றும் அனுமதியளிக்கப்பட்ட விருந்தினர்கள் எண்ணிக்கையை விட பன்மடங்கு அதிகளவான விருந்தினர்கள் மண்டபத்திற்கு சமுகமளித்தமை ஆகிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தளிர்ராஜ் தெரியப்படுத்தியுள்ளார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter