கள்ளக் காதலனுடன் தாய் வீட்டில் பதுங்கியிருந்த 2 பிள்ளைகளின் தாய் கள்ளக் காதலனுடன் கைது

காணாமல் போனதாகக் கருதப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் தனது தாய் வீட்டில் மறைந்திருந்த போது பிபிலைப் பொலிசாரால் அவ்விருவரும் இன்று 19-10-2020 கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தனது இரண்டு வயது குழந்தைக்கு மருந்து எடுக்கச் செல்வதாகக் கூறி பிபிலை பொது வைத்தியசாலைக்கு கடந்த  (03-10-2020) ?ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் சென்றிருந்தார்.

அதையடுத்து அப் பெண் காணாமல் போய்விட்டதாக பெண்ணின் கணவனால் பிபிலைச் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அம் முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த பெண்ணும், பெண்ணின் குழந்தையும் பொலிசாரினால் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் 17 தினங்களுக்கு பிறகு இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில் பொலிசார் விரைந்து குறிப்பிடப்பட்ட வீட்டைச் சுற்றி வலைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

தேடுதல் மேற்கொள்ளப்பட்ட வீடு காணாமல் போனதாகக் கருதப்பட்ட பெண்ணின் தாய் வீடென்றும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணும் பெண்ணின் கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் அறிவுரைகளை வழங்கி குறித்த பெண்ணை அப்பெண்ணின் இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி சட்டப்பூர்வ கணவனுடன் மீண்டும் இணைந்து வாழவும் அறிவுறுத்தினார். 

அத்துடன் அப் பெண்ணின் கள்ளக் காதலனுக்கும் மூன்று பிள்ளைகள் இருந்து வருகின்றனர்.

இவ்விருவருக்கும் வழங்கப்பட்ட அறிவுரைகளை அவர்கள் நிராகரித்தமையினால் பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter