கொழும்பு, வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனையடுத்த குறித்த பெலிஸ் அதிகாரியும் அவருடன் பணிபுரிந்த 16 பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமர்வீதி பொலிஸ் நிலையம் நேற்றைய தினம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Akurana Today All Tamil News in One Place