இன்றைய தினம் மத்துகமை ஓவிடிகல விகாரையில் 05 பிக்குகளுக்க கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த துறவிகள் சில நாட்களுக்கு முன்பு யட்டதொல- பதுகமையில் கொரோனா தொற்றுக்குள்ளன தனியார் பஸ் வண்டியின் பஸ் மற்றும் நடத்துனருடன் அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்றதையடுத்து இவர்கள் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்துகமை சுகாதார பிரிவுட்பட்ட பகுதிகளில் இதுவரை வரை 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் அதிகமான தொற்றாளர்கள் அகலவத்தா மற்றும் வலலவிட பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளனர்
இந்நிலையில் தற்போது குறித்த பிரதேசங்கள் உட்பட மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place