முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம் ஊடாக ஆண்கள் சார்பில் பக்கசார்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்களால் பெரும்பாலன பெண்கள் குழந்தைகளுடன் வீதியில் கைவிடப்பட்டுள்ளதாக அந்த நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்ட வெலிமடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் இன்றைய தினம் அவரது தந்தையுடன் ஊவாபரணகம பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
தந்தையின் பாதுகாப்பில் இருந்த இவர், 10 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் தனது கணவருக்கு தவறான உறவு காணப்படுவதாக பதுளையில் உள்ள காதி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
எனினும் தனது குழந்தையை பராமரிக்க நியாயமான இழப்பீட்டை அந்த நீதிமன்றத்திடம் கோரிய போதும், அது கிடைக்கவில்லை என அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
http://bit.ly/2YZDlY9
Akurana Today All Tamil News in One Place