செப்டம்பர் மாதம் பிரன்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது ஊழியர்களை விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்தது இலங்கையின் விமானசேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசேடவிமானத்தின் மூலம் 48 ஊழியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22 ம் திகதி விசேட விமானம் மத்தலைக்கு வந்து சேர்ந்தது என விமானசேவைகள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விமானத்தில் காணப்பட்ட அனைவரும் இலங்கை பிரஜைகள் என்பதை உறுதி செய்கின்றோம் என மத்தல விமானநிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் அனைத்து வழிகாட்டுதல்களும்; பின்பற்றப்பட்டன இலங்கை இராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள கொஸ்கொட செரெட்டன் ஹோட்டலிற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place