பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற அலுவல்கள், சேவை பிரிவின் கட்டத்தொகுதிக்குள் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஷாண் விஜேலால் நாடாளுமன்ற சேவை பிரிவுக்குள் அத்தியாவசிய தேவை நிமித்தம் சென்றிருந்த போது அந்தப் பிரிவுக்குள் செல்ல அவருக்கு இடமளிக்கப்படவில்லை என்றும் அதற்கான காரணத்தை உடனடியாக அறிவிக்குமாறு கோரியிருந்த போதே சபாநாயகர் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதனால், நாடாளுமன்ற சேவைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் அந்த பிரிவுக்குள் வெளியாட்களை அனுமதிக்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
Akurana Today All Tamil News in One Place