கொழும்பு, பம்பலப்பிட்டி ஐ.சி.பி.டி, கெம்பஸில் (ICBT Campus) கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் இறுதியாக கடந்த 4 ஆம் திகதி ஐ.சி.பி.டி வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக ஐ.சி.பி.டி. கெம்பஸ் நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தற்போது மாணவன் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கத்தன் சுகாதார வழிகாட்டல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 4 ஆம் திகதிக்கு பின்னர் ஐ.சி.பி.டி. கெம்பஸுக்கு வருகை தந்தோர் விழிப்பாகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீரகேசரி பத்திரிகை
Akurana Today All Tamil News in One Place