பெப்ரவரி மாதம் செலுத்திய மின்சார கட்டண தொகையையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த மின் கட்டணங்களை செலுத்துவதற்கு 2 மாம் சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நுகர்வோர் பிப்ரவரி மாத மின் பட்டியல் கணக்கின் படியே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கும் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நுகர்வோர் கட்டணங்களை செலுத்தி இருந்தால், தொடர்புடைய தொகை திருப்பித் தரப்படும் அல்லது எதிர்கால பில்களிலிருந்து கழிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Akurana Today All Tamil News in One Place