தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தாமல் இந்தியர்கள் சிலரை பிரென்டிக்ஸ் நிறுவனம் அழைத்துவந்தது என தெரிவிக்கப்படுவதை இலங்கை இராணுவதளபதி சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம்பெற்றன அதன் போது இது பொய்யான தகவல் என்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார மாத்தறை ஊடாக மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர் இவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Akurana Today All Tamil News in One Place