கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரப் பிரிவின் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுகாதார அலுவலர் டாக்டர் சந்திகா பந்தரா விக்ரமசூரியா தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் வசிக்கும் 50 வயதான பெண்ணொருவரே கொரோனா இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த பெண் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த பெண் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய நபர்களிடம் பி.சி.ஆர். சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தற்போது சுகாதாரப் பிரிவினரின் கண்காணப்பில் உள்ளனர்.
தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day
Akurana Today All Tamil News in One Place