மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் – CCTV யில் சிக்கிய காட்சிகள்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை எடுத்து செல்வதனை நாம் கடந்த காலங்களில் ஊடகங்களுடாக வெளிப்படுத்தியிருந்தோம்.

எனினும் இது குறித்து வனபாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 01.10.2020 அன்று இரவு வீடுகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டினுள் வருகை தந்து வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்றினை கவ்விச் செல்வது அந்த வீட்டில் உள்ள சி.சி.டி.வி கமாராவில் பதிவாகியுள்ளன

இந் நிலையில் மக்கள் நடமாடும் பகுதியில் இரவு வேளையில் வெளிச்சத்திலும், சிறுத்தைகள் வருகை தந்து கால்  நடைகளை கொண்டு செல்வதனால் இப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தைகள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளை, கோழிகூண்டினை உடைத்து கொண்டு செல்வதனை சி.சி.டி.வி கமராவில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொது மக்கள் உயிர்களுக்கும் சிறுத்தைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter