எம்டி டயமண்ட் கப்பலின் உரிமையாளர்களிடம் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நஷ்டஈடு கோரிக்கையை வழங்குவதற்கு கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் குறித்த கப்பல் உரிமையாளர்களிடமிருந்து 340 மில்லியன் ரூபா கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான பனமேனியா எண்ணெய் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அறிக்கையொன்று சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் நேரடி விளைவாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான ஆரம்ப பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது முகாமையாளர் டாக்டர் டெர்னி பிரதீப் குமாரா கூறினார்.
இந்த அறிக்கையை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் ஒரு சிறப்புக் குழு தொகுத்துள்ளதாக டாக்டர் டெர்னி பிரதீப் தெரிவித்தார்.
Akurana Today All Tamil News in One Place